சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. விஜய் ஜோடி சமந்தா. இதன் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல் பணிகள் அனைத்தையும் அனிருத் முடித்து விட்டார்.
இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை லண்டன் நகரில் வருகிற செப்டம்பர் 20ம் தேதி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக செப்டம்பர் 15ம் தேதியே இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகர் பாடகிகள், நடன கலைஞர்கள், நடன இயக்குனர் ஷோபி ஆகியோர் செல்கிறார்கள். லண்டனுக்கு செல்ல விசா விண்ணப்பித்திருப்பதிலிருந்து இந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது
லண்டனில் பாடல்களை அந்தந்த பாடகர்களே பாட உள்ளனர். அனிருத் மேடையில் இசை அமைக்க உள்ளார். ஷோபி நடனம் அமைக்கிறார். ஒரு பாடலுக்கு சமந்தா ஆடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி