வரி உயர்வு காரணமாக குளிர்பானம் நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த இழப்பை சரிகட்ட வேண்டுமானால் வரி உயர்வு சுமையை அப்படியே நுகர்வோர் தலையில் சுமத்த குளிர்பான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.எனவே குளிர்பானங்கள் விலையை தற்போதைய விலையில் இருந்து 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன. எனவே குளிர்பானங்கள் விலை விரைவில் கணிசமாக உயர உள்ளது.
500 மில்லி, ஒரு லிட்டர் மற்றும் 1½ லிட்டர் குளிர்பானங்கள் விலை ரூ.2 முதல் ரூ.4 வரை உயரும் என்று தெரிகிறது. ஆனால் மிகச் சிறிய குளிர்பானங்கள் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.இந்த விலை உயர்வு காரணமாக குளிர்பானங்கள் விற்பனையில் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. நடப்பாண்டில் 3 மாதங்களில் இந்தியாவில் குளிர்பானம் விற்பனை 6 சதவீதம் அதிகரித்து இருந்தது. இந்த வளர்ச்சி நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி