செய்திகள்,திரையுலகம் நடிகர் ஸ்ரீகாந்தை மச்சான் என அழைக்கும் நடிகை நமீதா!…

நடிகர் ஸ்ரீகாந்தை மச்சான் என அழைக்கும் நடிகை நமீதா!…

நடிகர் ஸ்ரீகாந்தை மச்சான் என அழைக்கும் நடிகை நமீதா!… post thumbnail image
சென்னை:-ஸ்ரீகாந்த், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள படம் நம்பியார். கணேஷா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவில் சரத்குமார், சூர்யா, சமுத்திரகனி, ஆர்.கண்ணன், ஜீவா, ஷாம், நமீதா, சுனைனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நமீதா பேசும்போது, எடுத்த எடுப்பிலேயே ஸ்ரீகாந்த்தான் என் மச்சான் என்றார். அதைக்கேட்டு விழாவுக்கு வந்திருந்தவர்களை விட விழா மேடையில் நின்று கொண்டிருந்த ஸ்ரீகாந்தின் மனைவியும், நம்பியார் படத்தின் தயாரிப்பாளருமான வந்தனா ஸ்ரீகாந்த் அதிர்ந்து போனார். மேலும் நமீதா தொடர்கையில், ஸ்ரீகாந்தும், நானும் இந்திர விழா, பம்பரக்கண்ணாலே போன்ற படங்களில் நடித்திருக்கிறோம். அப்போதெல்லாம் ஸ்பாட்டில் ரொம்ப ஜாலியாக இருப்போம்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தால் என்னையுமறியாமல் ஒருவித எனர்ஜி எனக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அந்த அளவுக்கு பாசிட்டீவாக பேசுவார் ஸ்ரீகாந்த். மேலும், ரொமான்ஸ் காட்சிகளில் எங்களுக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரியும் அந்த படங்களில் இருந்தது. அதேபோல், இந்த படத்தில் சுனைனாவுடனும் அவர் நடித்திருக்கிறார். அது பாடல்களிலேயே தெரிகிறது என்றார் நமீதா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி