அந்தவகையில் அங்கு செயல்பட்டு வந்த 40-க்கும் மேற்பட்ட சமூக விரோத குழுக்களை ‘தீவிரவாத குழுக்கள்’ என அறிவித்துள்ள சீன அரசு, அவற்றை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கைது செய்துள்ளது.அடுத்ததாக, இந்த தீவிரவாதிகளின் வன்முறை சம்பவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும், பிறருக்கு அனுப்பியும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீதான வழக்குகள் சின்ஜியாங் மண்டல தலைநகர் ஊரும்கி, அக்சு, டர்பன் மற்றும் கோடன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 29 பேருக்கு 4 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி