‘கஜினி’ படம் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்றதிலிருந்தே சூர்யாவுக்கென ஆந்திராவில் தனி மார்க்கெட் ஏற்பட்டு விட்டதாம். அதிலும் இந்தப் படத்தில் தெலுங்கின் முன்னணி ஹீரோயினான சமந்தா நடித்திருப்பதாலும், ஆக்ஷன் படம் என்பதாலும் கண்டிப்பாக ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று கருதியே இவ்வளவு விலை கொடுத்து ஸ்ரீதர் வாங்கியுள்ளாராம். அதற்கேற்றபடி படத்தை இப்போதே சில வினியோகஸ்தர்கள் வாங்கியும் விட்டார்களாம். நிஜாம் ஏரியாவை மிகப் பெரிய விலை ஒன்றைக் கொடுத்து வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். விலை வெளியில் தெரியவில்லை என்றாலும் 5 கோடி வரை போயிருக்கலாம் என்கிறார்கள்.
‘செடட்’ என அழைக்கப்படும் ஏரியாவின் விலை சுமார் 3 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாம். இரண்டு முக்கிய ஏரியாக்களே இவ்வளவு விலை போன நிலையில் மீதி ஏரியாக்களும் லாபத்தில் விற்கப்படும் என்கிறார்கள். அது மட்டுமின்றி தொலைக்காட்சி உரிமை, டிவிடி உரிமை என மேலும் சில கோடிகளுக்கு வியாபாரமாக வாய்ப்புள்ளதாம். ஒரு தமிழ் ஹீரோவுக்கு தெலுங்கில் இந்த அளவு வரவேற்பு ஏற்பட்டுள்ளது சில தெலுங்கு ஹீரோக்களுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் ‘டப்பிங்’ படங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி