சென்னை:-தற்போது 5 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 55 வயது முதியவராக நடிக்கிறார். இது இப்போதைய இளவட்ட நடிகர்கள் யாரும் செய்யத்துணியாத ஒரு முயற்சியாகும். மேலும் இந்த ரோலுக்காக தொப்பை கெட்டப்பில் நடித்து வரும் அவர், கேரக்டரோடு அதிக இன்வால்வாகி விட்டாராம்.
அதன்காரணமாக, அடுத்தடுத்து தான் நடித்து வரும் படங்களை சுத்தமாக மறந்து விட்ட விஜய் சேதுபதி, எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தையும் டீலில் விட்டிருக்கிறாராம். அந்த படத்தில் நடிக்க எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தயார் என்று ஷாம், ஆர்யா இருவரும் சொன்னபோதும் விஜயசேதுபதியின் கால்சீட் இல்லாததால் படம் இழுத்துக்கொண்டு கிடக்கிறதாம்.
அதோடு, கடைசி க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க ஒரு பிரமாண்ட ஜெயில் செட் போட்டுள்ள ஜனநாதன், ஒன்றரை கோடி செலவு செய்து அமைத்த செட் விஜய் சேதுபதி வருவதற்குள் வீணாகி விடுமோ என்று செட்டையே வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி