இந்த செய்திகள் வெளியானதும் உலகத் தமிழர்களிடமிருந்து கத்தி படத்துக்கும், விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்தன. குறிப்பாக, புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மத்தியில் கொதிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றியதுபோல் மற்றொரு செய்தி வெளியாகி உளளது. லைகா புரொடக்ஷன் நிறுவனர் அல்லிராஜாவின் குடும்ப விழாவுக்காக இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லப் போகிறார் என்பதே அது.
அல்லிராஜாவின் தாயார் ஞானம் அம்மாளின் பிறந்தநாள் விழா விரைவில் லண்டனில் நடைபெறுகிறது. அந்தவிழாவில கலந்து கொள்ள விஜய், சமந்தா உள்ளிட்ட கத்தி படக்குழுவினர் அனைவருமே லண்டன் செல்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. லைகா நிறுவனத்துக்கும் ராஜபட்சேவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஐங்கரன் மற்றும் முருகதாஸ் விளக்கம் கொடுத்தாலும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்அதை ஏற்று கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களது குடும்பவிழாவுக்கு விஜய் செல்ல இருப்பது பிரச்சனையை மீண்டும் ஊதிவிட்டதாகிவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி