பெய்ஜிங்:-மத்திய சீனாவில் உள்ள ஒரு நீர்தேக்கத்தில் மழைலயர் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பள்ளி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாயினர்.சீனாவின் ஹூனான் மாகாணத்தில் மலைப்பகுதியான சங்க்சா பகுதிக்கு, பள்ளி முடிந்த பின் குழந்தைகளை மீண்டும் வீடுகளுக்கு அழைத்தும் செல்லும் வழியில் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.
இந்த விபத்தில் 8 பள்ளி குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் ஒரு டிரைவர் உட்பட 11 பேர் இந்த விபத்தில் பரிதாபாமாக பலியாயினர். இன்று அதிகாலை 11 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த தகவலை அங்கிருந்த வெளியாகும் சீன செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி