எனவே அதை சீரமைக்க ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் கமிட்டி கடந்த டிசம்பரில் இதற்கு ஒப்புதல் அளித்தது.அதன்படி தற்போது அங்குள்ள 31 மாகாணங்களில் 29 மாகானங்கள் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற திட்டத்தை அமல்படுத்த தொடங்கி விட்டன. அதற்கு ஏற்கனவே குடும்பத்தில் ஒரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்ட தம்பதிகள் தகுதி படைத்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து கிழக்கு சீனாவின் ஷெஜியாஸ் மாகாணம் முன்னிலையில் இருக்கிறது. கடந்த மே மாதம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 600 தம்பதிகள் 2–வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி