விஜய் ஆட்டமிழந்தவுடன் தோனி தனது அதிரடி ஆட்டத்தை கைவிட்டு நிதானமாக ஆடத் தொடங்கினார். அதே சமயம் தோனி விட்ட பணியை ஜடேஜா எடுத்துக்கொண்டார். அதிரடியாக ஆடிய அவர் 24 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்தபோது ஸ்ட்ரோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிரியரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் இரு பவுண்டரிகளும், இரு சிக்சர்களும் அடங்கும். அப்போது அணியின் ஸ்கோர் 344 ரன்களாக இருந்தது.இந்த கட்டத்தில் மேலும் இரண்டு ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. ஜடேஜா அவுட்டான சில நிமிடங்களில் தோனி 82 ரன்னில் ரன் அவுட்டாக, அறிமுக வீரரான பின்னியும், இஷாந்த் சர்மாவும் ஒரு ரன்னில் நடையை கட்ட 344 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா 346 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புவனேஸ்வர் குமாரும், முகமது சமியும் முன் வரிசை ஆட்டக்காரர்கள் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். பொறுமையாக விளையாடிய புவனேஸ்வர் குமார் 58 ரன்கள் எடுத்தபோது அவுட்டாக, சமி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்தார். இருவரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 457 ரன்களை குவிக்க முடிந்தது.பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது. அந்த அணியின் கேப்டனும் துவக்க வீரருமான குக் 5 ரன்களில் சமி பந்துவீச்சில் போல்டானார். பின்னர் மற்றொரு துவக்க வீரரான ராப்சனுடன், பால்லன்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் மேற்கொண்டு விழாமல் தடுக்கும் வகையில் நிதானமாக ஆடினர். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி