என்றாலும், இந்த படத்தை விட மலையாளத்தில் திலீப்புடன் அவர் நடித்துள்ள அவதாரம் படத்தைதான் பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அவர். மிகப்பெரிய இயக்குனர் ஜோஷி இயக்கியுள்ள இப்படம் ரம்ஜானுக்கு திரைக்கு வருகிறதாம். இந்த படம் ஹிட்டடித்தால் அடுத்து தமிழைப்போலவே மலையாளத்திலும் ஒரு கால் பதித்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம் லட்சுமிமேனன்.
அதனால், தற்போது மலையாளத்தில் முகாமிட்டு அவதாரம் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் திலீப்புடன் சேர்ந்து செயல்பட்டு வரும் லட்சுமிமேனனை இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்து சில மலையாள பட இயக்குனர்கள் புக் பண்ணவும் தயாராக உள்ளார்களாம். அத்தனையுமே கதாநாயகியை மையமாகக் கொணட கதைகளாம். அதனால் புதிய தமிழ்ப்படங்களுக்கு கால்சீட் கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி