செய்திகள்,திரையுலகம் அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…

அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…

அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!… post thumbnail image
சென்னை:-கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் செளந்தர்யா ரஜினி. அதையடுத்து ரஜினி நடித்த சில படங்களின் தலைப்புகளை வடிவமைத்து கொடுத்து வந்த செளந்தர்யா, கோவா படத்தில் தயாரிப்பாளரானார். அதையடுத்து, சுல்தான் தி வாரியர் என்ற கிராபிக்ஸ் படத்தை ரஜினி-விஜயலட்சுமியை வைத்து இயக்கினார். ஆனால், அந்த படம் சரியாக வரவில்லை.

அதன்பிறகுதான் கோச்சடையானை தொடங்கினார். கிட்டத்தட்ட சுல்தான் தி வாரியர் படம் கொடுத்த அனுபவத்திலேயே இந்த படத்தை இயக்கிய செளந்தர்யா, இப்போது பேசப்படும் இயக்குனராகி விட்டார். அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.இந்நிலையில், தனது ஒவ்வொரு விசயங்களையும் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வரும் செளந்தர்யா, தற்போது அப்பா ரஜினி, அம்மா லதாவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்தியிருப்பதை போட்டோவுடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கோச்சடையானுக்குப்பிறகு என் மகள் செளந்தர்யா என்னை வைத்து படம் இயக்கியபோது ஆக்சன்-கட் சொன்னதைக்கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டேன். சொந்த மகளே தங்களை இயக்குகிற பாக்கியம் எத்தனை நடிகர்களுக்கு கிடைக்கும். அதை எனக்கு கொடுத்து பெரிய சந்தோசத்தை என் மகள் செளந்தர்யா கொடுத்து விட்டார் என்று சில மேடைகளில் மகளைப்பற்றி சொல்லி வரும் ரஜினி, மகள் தங்கள் மீதான பாசத்தை இப்படி கையில் பச்சைக்குத்தி வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்து, மேலும் நெகிழ்ந்து போயிருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி