லாஸ் ஏஞ்சலஸ்:-வாஷிங்டனிலிருந்து கொலராடோவின் மைல் ஹை சிட்டிக்கு புறப்பட தயாராக இருந்த அமெரிக்க விமானம் ஒன்று இடி, மின்னல் மற்றும் கனமழை காரணமாக திருப்பி விடப்பட்டது.வானிலை சீராகும் வரை விமானத்தில் சென்ற அனைவரும் யோமிங்கில் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. பல மணி நேரத்திற்கு பிறகு விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.
நீண்ட நேரம் தாமதமானதால் பயணிகள் எரிச்சலடைந்தனர். இந்நிலையில், அவர்களை சமாதானப்படுத்துவதற்காக அந்த விமானத்தின் பைலட் ப்ராட்னர் பயணிகள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் பீட்சா வாங்கிக் கொடுத்தார்.இதுகுறித்து அந்த பைலட் ப்ராட்னர் கூறுகையில், விமானம் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடையும் வரை பயணிகளை பாதுகாப்பது எங்கள் கடமை. அவர்களை நம் குடும்பத்தினரை போல எண்ண வேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி