அமெரிக்கா:-‘அமெரிக்கன் ஹஸில்’ , ‘சூப்பர் மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகை எமி ஆடம்ஸ். கடந்த வாரம் எமி ஆடம்ஸ் டெட்ராய்டு என்ற நகரத்தில் இருந்து லாஸ் ஏஞ்சலுக்கு விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது சாதாரண எகானாமிக் வகுப்பில் அமெரிக்க ராணுவ வீரர் உடையில் ராணுவ சீருடையில் பயணம் செய்துகொண்டிருந்ததை பார்த்ததும் உடனே தன்னுடைய முதல் வகுப்பு சீட்டை அவருக்கு கொடுத்தார்.
அந்த அமெரிக்க வீரர் எவ்வளவோ மறுத்தும், நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்ய துணியும் ஒரு போர் வீரர் முதல் வகுப்பில் செல்வதுதான் சரி என்று கூறி வலுக்கட்டாயமாக அவரை தனது சீட்டில் உட்கார வைத்தார்.இந்த சம்பவத்தை அதே விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் ஜெமிலி ஹில் என்பவர் நேரில் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். உடனே அவர் டுவிட்டரில் எமி ஆடம்ஸ் குறித்த நாட்டுப்பற்றை டுவிட் செய்தார். இந்த டுவிட்டுக்கு ஏராளமான ரீடுவிட் பதிவு செய்யப்பட்டது. அனைவரும் எமி ஆடம்ஸை பாராட்டினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி