ஆனால் ராகுல் தூங்கவில்லை என்று காங்கிரஸ் மறுத்தது. இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, இது உண்மை அல்ல. அனைத்து அவதூறுகளையும் ஒட்டுமொத்தமாக மறுக்கிறேன். கடந்த 7 வாரங்களாக இந்த அரசு அற்பத்தனமான, பழிவாங்கும் அரசியலில்தான் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
அதே நேரத்தில் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், விலைவாசி உயர்வு பிரச்சினையில், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு தூங்கிக்கொண்டிருந்தது.
பாராளுமன்றத்தில் இது குறித்த விவாதம் நடக்கும்போது காங்கிரஸ் கட்சியின் இளவரசர் தூங்கிவிட்டார். விலைவாசி உயர்வு, பணவீக்கம் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தயார் இல்லை. கோஷத்துக்காக இந்த வார்த்தைகளை முழங்குகின்றனர் என குற்றம் சாட்டினார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா, அற்பத்தனமான காரியம் பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது. இது சர்ச்சைக்குரியது அல்ல என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி