கணேஷா என்ற புதியவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருப்பான். அப்படிப்பட்ட அவன் வெளியே வரும்போது என்னென்ன நிகழ்கிறது என்பதை மையமாகக் கொண்டு கதை பண்ணியுள்ளனர். அப்படி ஸ்ரீகாந்துக்குள் இருக்கும் கெட்டவனாக சந்தானம் வெளியே வருகிறாராம். அவர் என்னென்ன ரகளை செய்கிறார் என்பதுதான் படமாம்.
அதனால்தால் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக வரும் நம்பியாரின் பெயரை அந்த கெட்டவனுக்கு வைத்திருக்கிறார்களாம். அந்த வகையில், சந்தானம் இதுவரை நடித்த படங்களில் இது புதுமாதிரியான வேடமாம் அவருக்கு. அதனால் அந்த கெட்டவனாக ஸ்ரீகாந்த் நடிக்கும்போது சந்தானம்தான் அவருக்கு டப்பிங் கொடுத்துள்ளாராம்.
அந்த வகையில், நம்பியார் படத்தில் சந்தானத்தின் ஆளுமை அதிகமாக இருக்குமாம். அதிலும் பாரில் சரக்கு அடித்து விட்டு ஸ்ரீகாந்த் ஆடிப்பாடும், ஆற அமர உட்கார்ந்து ஆட்டம் போடு என்று தொடங்கும் அந்த பாடலை சந்தானம் பாடியிருப்பதால் படத்துக்கு பெரிய ப்ளசாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஸ்ரீகாந்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி