மான்டிநிக்ரோ:-உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்க்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. தனது நீண்ட நாள் தோழியான ஜெலினா ரிஸ்டிக்கை திருமணம் செய்து கொள்கிறார். ஐரோப்பாவின் போட்கோரிகாவிலுள்ள குயின்ஸ் பீச்சில் அவர்களது திருமணம் இன்று நடக்கிறது.
பாரம்பரிய முறையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. திருமணத்திற்கு ஜோகோவிச்சின் பயிற்சியாளர் போரிஸ் பெக்கர், மர்ஜன் வஜ்டா, பிரபல டென்னிஸ் வீரர் மரியா ஷெபோவா, ஆண்டி முர்ரே உள்ளிட்ட 140 வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பிரம்மாண்ட திருமணத்திற்காக 6 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளார் ஜோகோவிச்.பிரபலங்கள் வருகையையொட்டி திருமணம் நடைபெறும் குயின்ஸ் பீச்சில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி