இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-சின்ன வயசுலேருந்து எனக்கு மியூசிக்னா உயிர். எப்பவும் கிதாரும் கையுமாத்தான் இருப்பேன். ஆனால் நடிகனாயிட்டேன். இப்போதும் ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டில் இருந்து கொண்டு புதுசு புதுசா டியூன் போட்டுக்கிட்டிருக்கேன். இதுவரைக்கும் 500க்கும் மேற்பட்ட டியூன்கள் போட்டு வச்சிருக்கேன்.
அதுல பெஸ்ட் செலக்ட் பண்ணி ஒரு மியூசிக் ஆல்பம் பண்ணலாமுங்ற ஐடியாவுல இருந்தேன். அதுக்குள்ள அனிருத்தின் கொலவெறி வந்து பட்டைய கிளப்பிடுச்சு, சிம்புவின் லப் ஆன்தம் வந்து பரபரப்பு கிளம்ப்பிடுச்சு. இந்த நேரத்துல நானும் ஆல்பம் பண்ணினா போட்டிக்கு பண்றேன்னு சொல்லுவாங்க, அதான் அந்த ஐடியாவை கைவிட்டுவிட்டேன். ஆனால் எதிர்காலத்துல ஆல்பம் பண்ணுவேன். படத்துக்கூட மியூசிக் பண்ணுவேன். என்கிறார் ஜெய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி