என் படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அஞ்சலியை வேறு படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று களஞ்சியம் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், அஞ்சலியுடன் காரசாரமாக மோதினால் வேலைக்கு ஆகாது. அவருடன் சாப்ட்டாக சென்றால்தான் வழிக்கு வருவார் என்று இப்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வாயிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் களஞ்சியம். இதையடுத்து அஞ்சலியுடன் மீண்டும் மென்மையான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறதாம்.
இதுவரை அஞ்சலியைப்பறறி புகார்களை களஞ்சியம் கூறிவந்த நிலையில், இப்போது களஞ்சியத்தைப்பற்றியும் அஞ்சலி சில புகார்களை சொல்லி வருகிறாராம். இருப்பினும், எப்படியும் அவரை, ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தொனியில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி