நான் 14 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். ‘வேலையில்லா பட்டதாரி’ எனக்கு 25–வது படம். அப்போதெல்லாம் நடிகராவது கஷ்டமானதாக இருந்தது. வந்தபிறகு அதிர்ஷ்டம் இருந்தால் நிலைக்கலாம். ஆனால் இப்போது நடிகராவது எளிது. ஆனால் நிலைத்து இருப்பது கஷ்டம்.
நான் 14 வருடங்களாக சினிமாவில் இருப்பதற்கு ரசிகர்கள் அன்பும் உங்கள் ஆதரவுமே காரணம். ‘வேலையில்லா பட்டதாரி’ நல்ல கதை. எனக்கு முக்கியமான படமாக இருக்கும். என் 25–வது படத்தில் விவேக் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இது நடந்துள்ளது. அமலாபாலும் நானும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடிக்க முயன்றும் நடக்கவில்லை. இதில் அது நிறைவேறியுள்ளது. பக்கத்து வீட்டு பெண் ‘இமேஜ்’ அவருக்கு இருக்கிறது. இதில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
1980, 90–களில் மனோரமா இல்லாத படமே இருக்காது. இப்போது சரண்யா அம்மா வேடத்தில் நடிக்காத படமே இல்லை. அவரும் சமுத்திரக்கனியும் எனது பெற்றோர் கேரக்டரில் அபாரமாக நடித்துள்ளனர். அனிருத் இசை பெரிய பலம். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.
நடிகர் விவேக் பேசும்போது, ‘படங்கள் எடுத்து ரிலீஸ் செய்வது இப்போது கஷ்டமானதாக உள்ளது. ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து படத்தை தூக்கி விடுகின்றனர். சிறு தயாரிப்பாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது. அந்த படங்கள் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயம் அழிவதுபோல் சினிமாவும் அழிந்து விடும்’’ என்றார்.
இந்த சந்திப்பில், அமலாபால், சுரபி, சமுத்திரக்கனி, ரிஷி, இசையமைப்பாளர் அனிருத், சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் மதன், இயக்குனர் வேல்ராஜ் ஆகியோரும் பேசினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி