முதல் கட்டமாக அஞ்சான் படத்தின் டீசர் சமீபத்தில் யுடியூபில் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான சில தினங்களிலேயே 11 லட்சம் பேர் யுடியூபில் அஞ்சான் டீசரை கண்டு களித்திருக்கிறார்களாம். இதையே படத்தின் வெற்றியாகக் கருதி சக்சஸ்மீட் வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டது அஞ்சான் டீம். டீசருக்கு சக்சஸ் மீட் வைத்தது திரையுலகில் கடும் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.
இப்படியோ போனால் படத்துக்கு பூஜை போட்ட அன்றே சக்சஸ் மீட் வைப்பார்கள் போலிருக்கிறதே என்று நக்கலாக கமெண்ட் அடிக்கின்றனர் திரையுலகினர்.
அடுத்த கட்டமாக, அஞ்சான் படத்தின் விளம்பரத்துக்காக ஆண்ட்ராய்டில் அஞ்சான் கேம் தயாராகி வருகிறதாம். சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று இந்த அஞ்சான் கேமை வெளியிட இருக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி