மும்பை:-பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். கடந்த 1998ம் ஆண்டு இந்தி படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார்.அப்போது இவரும் மற்றும் 5 பேரும் அங்குள்ள வனத்தில் கடமான் வேட்டையாடியதாக தெரிகிறது. அதுதொடர்பாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு மான் வேட்டையாடிய குற்றத்துக்காக அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சல்மான்கான் அப்பீல் செய்தார். அதைத் தொடர்ந்து 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதில் 4 வாரத்துக்குள் சல்மான்கான் பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி