செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாதம் தடை!…

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாதம் தடை!…

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாதம் தடை!… post thumbnail image
டாக்கா:-கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் வருகிற 11ம் தேதி முதல் ஆகஸ்டு 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் பங்கேற்பதற்காக பார்படோஸ் சென்று இருக்கிறார். இதற்கிடையில் வங்காளதேச அணியின் பயிற்சி முகாமுக்கு ஆகஸ்டு 1ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று வீரர்களுக்கு புதிய பயிற்சியாளர் சன்டிகா ஹதுருசிங்கா தகவல் தெரிவித்தார்.

பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் இருந்து பாதியில் விலக நேரிடும். இதனால் ஷகிப் அல்-ஹசன் பயிற்சியாளரிடம் தான், சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று விடுத்த மிரட்டலை தொடர்ந்து அவரை விசாரணைக்கு நேரில் வருமாறு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீசு அனுப்பி இருந்தது. விசாரணைக்கு நேற்று காலை ஷகிப் அல்-ஹசன் ஆஜாரானார். விசாரணை முடிந்த பிறகு அவர் மீதான தண்டனையை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.இதன்படி ஷகிப் அல்-ஹசன் 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த கால கட்டத்தில் அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. அத்துடன் 2015-ம் ஆண்டு வரை அவருக்கு வெளிநாட்டு போட்டிகளில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஷகிப் அல்-ஹசனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கருத்து தெரிவிக்கையில், வங்காளதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஷகிப் அல்-ஹசன் நடத்தை பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளார். இது போன்ற நடத்தைகள் அணியில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஷகிப் அல்-ஹசனுக்கு தடை விதிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இன்று (நேற்று) காலையில் ஷகிப் அல்-ஹசன் என்னிடம் பேசினார். அவரிடம் தடையில்லா சான்றிதழ் இருப்பதாக நினைத்து கொண்டு அவர் பேசினார். ஆனால் அவரிடம் தடையில்லா சான்றிதழ் எதுவும் கிடையாது. பயிற்சியாளரிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்ட அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார். நாங்கள் எல்லோருக்கும் சரியான தகவலை கொடுக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இதேபோல் மீண்டும் தவறு செய்தால் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை விவகாரத்தில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி