செய்திகள்,திரையுலகம் டாக்டராக நடிக்கும் நடிகை மம்தா!…

டாக்டராக நடிக்கும் நடிகை மம்தா!…

டாக்டராக நடிக்கும் நடிகை மம்தா!… post thumbnail image
சென்னை:-நடிகை மம்தா தமிழில் சிவப்பதிகாரம், தடையறத்தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்தவர். மலையாளத்தில் பிசியான நடிகை.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்தாவை மீண்டும் புற்று நோய் தாக்கியபோது அவர் ஆரோக்கியம் இழந்து விட்டார் சினிமாவை விட்டு விலகுகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

மறுவாரமே தென்னை மரத்தில் ஏறும் காட்சியில் நடித்து தன் ஆரோக்கியத்தை நிரூபித்தார்.தற்போது மம்முட்டி ஜோடியாக வர்ஷம் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு டாக்டர் கேரக்டர். மம்முட்டி வியாபாரியாக நடிக்கிறார். ரஞ்சித் சங்கர் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புகள் ஆரம்பமாகிறது.

இதுகுறித்து மம்தா கூறும்போது எல்லா கேரக்டரைப் போன்றுதான் டாக்டர் கேரக்டரையும் ஏற்றிருக்கிறேன். அதைப் பற்றி சிறப்பாக பேசுவது ஏன் என்று தெரியவில்லை. நான் ஒரு புற்று நோயாளி என்கிற கண்ணோட்டத்தில் என்னை பார்ப்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி