இங்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படம் உலகின் பல்வேறு மொழிகளிலும் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது. ஜப்பான் மொழியிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டது. அதை அறிமுகப்படுத்துவதற்காக கடந்த மாதம் ஸ்ரீதேவி ஜப்பான் சென்று வந்தார். ஜப்பான் மொழியில் ‘மேடம் இன் நியூயார்க்’ என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது.படத்தை ஜப்பான் ரசிகர்கள் வெகுவாகவே ரசிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்ல படம் வெளியான முதல் நாளில் மற்றப் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் வசூல்தான் அதிகமாக இருந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் கௌரி ஷின்டேவும், நடிகை ஸ்ரீதேவியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஒரு பெண் இயக்குனர் இயக்கி ஒரு பெண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படத்திற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்து வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஸ்ரீதேவிக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் கிடைத்து விட்டார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி