செய்திகள்,திரையுலகம் கேரள அரசின் தூதர் ஆனார் நடிகை மஞ்சு வாரியார்!…

கேரள அரசின் தூதர் ஆனார் நடிகை மஞ்சு வாரியார்!…

கேரள அரசின் தூதர் ஆனார் நடிகை மஞ்சு வாரியார்!… post thumbnail image
கேரளா:-கேரளாவில் குடும்ப ஸ்ரீ என்ற பெண்கள் அமைப்பு அரசு ஆதரவில் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை இந்த அமைப்பின் மூலம் கேரள அரசு செய்து வருகிறது. ஷீ டாக்ஸி என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது. பெண்களை டிரைவராக கொண்ட இந்த டாக்ஸியில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் பயன்படுத்தலாம்.

வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்யும் திட்டத்தையும் இந்த அமைப்பு அண்மையில் தொடங்கியது. இந்த திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை மஞ்சு வாரியார் நியமிக்கப்பட்டிருக்கிறார். குடும்ப ஸ்ரீ அமைப்பின் விழாவில் கேரள சமூக நலத்துறை அமைச்சர் முனீர் இதனை அறிவித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மஞ்சுவாரியார் ஹவ் வோல்ட் ஆர் யூ என்ற படத்தில் நடித்தார். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் அவர் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி