இந்நிலையில், மூவரின் உடல் அடக்கத்துக்கு ஒரு பெண் தொடர்ச்சியாக வந்திருப்பதை போட்டோ மூலம் கண்டறிகிறார்கள். அவள் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கின்றனர். அவள், சிசி லியூ என்ற நடிகை. அவளை காதலிப்பதாக கூறியவர்கள்தான் கொலையுண்டவர்கள். சிசி லியூவின் அக்காவான யான் லியூ தனது தங்கையை காதலிப்பதாக கூறுபவர்களிடம் நெருக்கமாக பழகி வருகிறார். இது சிசி லியூவுக்கு பிடிக்கவில்லை. தனது 4-வது காதலருடன் அவள் நெருக்கமாக பழகுவது தனது அக்காவை வெறுக்கும் அளவிற்கு சிசி லியூவை கொண்டு செல்கிறது.இந்நிலையில், 4-வது காதலன் சிசி லியூவின் அக்காவை பிரிந்து இவளிடம் வந்து தனது காதலை சொல்கிறான். அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் சிரித்துக் கொண்டே சொல்கிறான். அப்போது திடீரென கிழே விழுந்து இறந்து போகிறான். அவனது உடலை மருத்துவமனையில் வைத்து ஆய்வு செய்யும்போது, அவனது கையில் ஒரு சிறு ஊசி குத்தியிருப்பது தெரிகிறது. அதனால்தான் அவன் இறந்து போனதும் தெரிய வருகிறது ஜெட்லி குழுவுக்கு.
இந்த மர்ம ஊசியை அவன் மீது பாய்ச்சியது யார்? சிசி லியூவின் காதலர்களை கொல்ல காரணம் என்ன? என்பதை ஜெட்லி குழு எவ்வாறு கண்டுபிடித்தது என்பதே மீதிக்கதை.ஜெட்லி படத்தில் சில காட்சிகளே வந்து போகிறார். படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும், இறுதியில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும் தனது பலத்தை நிரூபித்துள்ளார். ஆவேசமான இந்த இரண்டு சண்டைக் காட்சிகளும் சீட்டின் நுனிக்கே நம்மை இழுத்துச் செல்கிறது.படம் முழுக்க வேன் ஜாங்தான் வலம் வருகிறார். படத்தில் இவர் செய்யும் சேஷ்டைகள் வெகுவாக ரசிக்க வைக்கின்றன. அழகான பெண்களை கண்டு ஜொள்ளு விடுவது, அவர்களிடம் வலியச் சென்று பேசுவது என ஒவ்வொரு காட்சியிலும் அழகாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.
இவர்களது குழுவுக்கு தலைவராக வரும் மிச்செல்லி சென் குறும்பு பார்வையால் அனைவரையும் கவர்கிறார். வேன் ஜாங்கோடு இவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன. நடிகையாக வரும் சிசி லியூ மென்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய அக்காவாக வரும் யான் லியூ கவர்ச்சியால் சுண்டி இழுக்கிறார்.சண்டைக் காட்சிகளை பிரமாதமாக எடுத்திருக்கிறார் இயக்குர் மிங் வாங். ஆனால் ஒரு போலீஸ் கதைக்கான விறுவிறுப்பு இல்லாதது ஏமாற்றமே. அதேபோல், படத்தின் நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளை புகுத்தி போரடிக்க வைத்திருக்கிறார். யிங் வாக் வாங்கின் இசை படத்திற்கு கூடுதல் பலம். கென்னியின் கேமரா காட்சிகளை கோர்வையாகவும், சண்டைக் காட்சிகளை அருமையாகவும் படம்பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கில்லாடி போலீஸ்’ கலக்கல்………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி