செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…

உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…

உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!… post thumbnail image
பெலோஹோரி கோன்ட்:-உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 2 நாள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது.இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் –  ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.இரு அணிகளுமே சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், பரப்பரப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளுமே தோல்வியை தழுவாமல் அரை இறுதியை எட்டியுள்ளன.

லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி, மெக்சிகோவுடனும், ஜெர்மனி அணி கானாவுடனும் ‘டிரா’ செய்து இருந்தன.பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஆடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே. கொலம்பியாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. நெய்மர் 4 கோல் அடித்துள்ளார்.மேலும் இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் பிரேசில் அணி கேப்டன் தியோசோ சில்வாவும் நாளைய அரை இறுதியில் ஆட முடியாது இந்த இருவரும் இல்லாதது பிரேசில் அணிக்கு பின்னடைவாகும்.
இதை சரிகட்டும் வகையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் பிரேசில் வீரர்கள் முத்திரை பதிக்க போராடுவார்கள்.டேவிட் லூயிஸ், ஹல்க், ஆஸ்கர், பெர்னாண்டினோ போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். தனது நாட்டில் நடைபெறும் போட்டி என்பதால் பிரேசில் அணிக்கு வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைய வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
8–வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பிரேசில் அணியை விட முன்னிலையில் ஜெர்மனி இருக்கிறது. இந்த அணி வீரர்கள் மிகவும் நேர்த்தியுடன் விளையாடுவார்கள். முன்களத்திலும், பின்களத்திலும் இந்த அணி சிறப்பாக செயல்படுகிறது.4 கோல் அடித்த தாமஸ் முல்லர், ஸ்வாடிக்கர், ஒசில், கேப்டர் பிலிப்லாம், ஹம்மலஸ், குளோஸ் போன்ற முன்னணி வீரர்கள் ஜெர்மனி அணியில் உள்ளனர்.அந்த அணியின் கோல் கீப்பர் மானுவேல் நோயர் அணியின் தூணாக இருக்கிறார். கால் இறுதியில் பிரான்ஸ் அணியின் பல கோல் வாய்ப்புகளை அடுத்து முத்திரை பதித்தார்.
தொடர்ந்து 4–வது முறையாக அரை இறுதியில் நுழைந்துள்ள ஜெர்மனி அணி கடந்த 2 உலக கோப்பையிலும் அரை இறுதியில் தோற்றது. அதே நிலைமை தொடர்ந்து 3–வது உலக போட்டியிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்தில் ஜெர்மனி அணி விளையாடும். அந்த அணி 2006–ல் இத்தாலியிடமும், 2010–ல் ஸ்பெயினிடமும் அரை இறுதியில் தோற்றது.
9–வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் ஜெர்மனி அணி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி