இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது. கடந்த முறை 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆன இந்திய அணி தற்போது வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளது.11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் டோனிக்கு தலைவலி இருக்கும். ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ரோகித்சர்மா கழற்றி விடப்படுவார். டிராவிட்டின் பேட்டிங் ஆலோசனை அணிக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் இந்திய அணி பலவிவீனப்பட்டு காணப்படுகிறது.வீராட்கோலி, புஜாரா, தவான், காம்பீர், கேப்டன் டோனி ஆகியோரது பேட்டிங்கை பொறுத்து இந்திய அணி நிலை உள்ளது.
இந்தியா அணி கடைசியாக நியூசிலாந்து தொடரில் பிப்ரவரி மாதம் விளையாடியது. இதில் முதல் டெஸ்டில் தோற்றது. 2–வது டெஸ்ட் டிரா ஆனது இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிராக தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0–1 என்ற கணக்கில் இழந்தது.இதை இந்திய அணி பயன்படுத்திக் கொண்டால் தொடரை வெல்லலாம்.
இரு அணிகளும் டெஸ்டில் மோதுவது 108–வது போட்டி யாகும். இது வரை நடந்த 107 டெஸ்டில் இந்தியா 20 போட்டியிலும், இங்கிலாந்து 40 டெஸ்டிலும் வெற்றி பெற்றன. 47 டெஸ்ட் டிரா ஆனது.நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி