தற்போது கீதாஞ்சலி என்ற புதிய படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடனமாட உள்ளாராம். அதே போல் கோ கோ கோபாலா என்ற படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பவர் ஸ்ரேயா. இப்படி மற்ற கதாநாயகிகள் நாயகியராக நடிக்கும் படங்களிலும் வேறு நாயகியர் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதை எந்த பொறமையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இதற்குக் காரணம் அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம்தான் என்கிறார்கள். சிலர் தயாரிப்பாளருக்காகவும், இயக்குனருக்காகவும், ஹீரோக்களுக்காகவும் நடிக்க சம்மதிக்கிறார்கள். இதனால், ஒரு பாடலுக்கு மட்டுமே நடிக்கும் நடிகைகளின் வாய்ப்பை முன்னணி ஹீரோயின்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி