புதுடெல்லி:-சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்றதால் சாய்னா 8-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறியிருக்கிறார். அதேசமயம் மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து டாப்-10 இடத்தை இழந்துள்ளார். இவர், ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியில் தோல்வியடைந்ததால் 10-வது இடத்தில் இந்து 11-வது இடத்திற்கு பின்தங்கினார்.
சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன வீராங்கனைகளான லி சுவேருயி, ஷிஜியான் வாங் மற்றும் யிகான் வாங் ஆகியோர் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். தென்கொரியாவின் ஜி ஹியுன் சங் நான்காவது இடத்திலும், தாய்லாந்தின் ரட்சனாக் இன்டானன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
ஆடவர் பிரிவில் பருபள்ளி காஷ்யப் ஒரு இடம் பின்தங்கி 21-வது இடத்தில் உள்ளார். இப்பிரிவில் லீ சாங் வெய் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி