சென்னை:-நயன்தாரா நடிக்க வந்தபோது அவர் மீது கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் இருந்தது. தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் அந்த இமேஜை மாற்றி விட்டது. தமிழிலும், தற்போது, கவர்ச்சியை தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே அவர் நடிக்கிறார்.
இதனால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களாக தேடி வருகிறார். இதுகுறித்து, அவர் கூறுகையில், கதைக்கு தேவைப்பட்டால், கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. அதற்காக, கவர்ச்சியை மட்டுமே வைத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாது. அதனால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி