சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர் என ஐந்து பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து பிரிவுகளில் தங்க மீன்களுக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்ற சஸ்பென்ஸில் இருக்கிறார் ராம்.இது ஒருபக்கமிருக்க, இந்த வருடத்துக்கான ஃபிலிம்பேர் பத்திரிகை விருது விழாவுக்கு பிராண்ட் அம்பாசடாராக தனுஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன் காரணமாக சிறந்த நடிகர் விருது இந்தமுறை நிச்சயமாக தனுஷுக்குத்தான் என்று முன்னணி ஹீரோக்கள் சிலர் சக நட்சத்திரங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருக்கினறனர். அதுமட்டுமல்ல, அதர்வா, காஜல் அகர்வால், பிரியா ஆனந்த், அமலாபால், அனிருத் ஆகியோருக்கும் இந்த முறை விருது நிச்சயமாக கிடைக்கும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி