பெண்கள் பிரிவில் அன்று விளையாடிய ரஷ்யா நாட்டின் வீராங்கனையான மரியா ஷரபோவா போட்டிகளுக்குப்பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு அவரிடம் சச்சின் பற்றி கேட்கப்பட்டபோது அவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். பெக்காம் பற்றி கேட்டபோது லண்டனிலும், லாஸ் ஏஞ்சல்சிலும் சில முறை சந்தித்துள்ளதாகக் கூறினார். சிறந்த கால்பந்து வீரராக இருந்ததுடன் தன்னுடைய தொழில்காலத்தில் அவர் பல செயல்களைச் செய்தார். அவர் ஒரு நல்ல மனிதர். நாங்கள் சிறந்த நண்பர்களாக இல்லை என்றபோதிலும் அவருடைய சாதனைகள் குறித்து வாழ்த்து சொல்வதும் நல்ல விஷயங்களாகும் என்று கூறினார். மேலும், கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டான் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
டென்னிஸ் ரசிகரான டெண்டுல்கர் விம்பிள்டன் போட்டிகளுக்கு தொடர்ந்து போகும்போதும், டென்னிஸ் ஜாம்பவானான ரோஜர் பெடரரின் நல்ல நண்பராகவும் இருந்தும் ஷரபோவா அவரைத் தெரியாது என்று கூறியது அங்கிருந்த அனைவருக்கும் வியப்பைத் தந்தது. ஆனால் சச்சினின் ரசிகர்களிடத்தில் இந்தத் தகவல் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோபமானது இணையதளத் தகவல்களாக வெளிவந்துள்ளது.
ஐந்துமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ள ஷரபோவாவின் இணையதளப் பக்கங்கள் முழுவதும் ரசிகர்களின் கோபமான கருத்துகளால் நிரம்பியுள்ளன. அவருக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் மரியா ஷரபோவா யார் என்றும் தகவல்களை அவரது பக்கங்களில் ரசிகர்கள் நிரப்பியுள்ளனர். உலகம் முழுவதும் டிவிட்டரில் இந்தத் தகவல் பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி