மேலும் இந்த சிகிச்சை முறையை இவர் இளைஞர்களுக்குக் கற்றுத்தருகிறார். முதுகுத் தண்டில் சிகிச்சை பெற அவரிடம் வந்த மனிதரை படுக்கவைத்து அவரது முதுக்குபுறத்தில் மூலிகை மருந்து ஒன்றினைத் தடவி துணியினால் மூடுகின்றார். அதன்மேல் தண்ணீரும், 95 சதவிகிதம் ஆல்கஹாலையும் தேய்த்து பற்ற வைக்கின்றார். நோயாளி அமைதியாகப் படுத்திருக்க அவரது முதுகில் தீச்சுடர் நடனமிடுகின்றது.
இதில் அவருக்கு வலி ஏதும் இருக்காது. வெப்பத்தை மட்டுமே உணருவார் என்றும் மேலும் இத்தகைய சிகிச்சையினால் அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நினைவும், இயக்கமும் பாதிக்கப்பட்டிருந்த 47 வயதுடைய ஒருவரும் சிகிச்சைக்கு வந்திருந்தார். தனக்கு இந்த சிகிச்சை முறை பலனுள்ளதாக இருக்கும் என்று அவர் கருதுகின்றார். நாள்பட்ட முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த சாவோ சிங் (வயது 49) முதலில் அதிர்ந்துபோனாலும் இதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்னர் தனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறினார்.
உடலில் உள்ள வெப்ப, குளிர் நிலைகளை சமமாகப் பராமரிப்பதன் மூலம் சுகாதாரமாக வாழ முடியும் என்ற சீன நாட்டுப்புற நம்பிக்கைகள் அடிப்படையில் இந்த சிகிச்சைமுறை செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. உடலின் மேற்புறத்தில் ஏற்படுத்தப்படும் வெப்பமானது உள்ளே இருக்கும் குளிர்நிலையை சமன்படுத்துகின்றது என்று கூறும் சாங் மூத்த சீன அதிகாரிகள் உட்பட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இந்த தீ சிகிச்சையை அளித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடும், விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் வெகுஜன மக்களை இதுபோன்ற எளிய சிகிச்சைகள் பக்கம் ஈர்க்கின்றது என்பது இத்தகைய சிகிச்சைகள் பிரபலமாவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.ஒரு மனிதனின் அடிப்பகுதியில் இதுபோன்ற தீ சிகிச்சை அளிப்பதான புகைப்படம் சீன சமூக ஊடகத்தில் வெளிவர நாடு முழுவதும் பரபரப்பைப் பெற்றது. உங்கள் இறைச்சியை எவ்வாறு சமைக்க விரும்புகின்றீர்கள் என்ற வாசகத்துடன் இந்தக் காட்சி தற்போது அங்கு மிகவும் பிரபலமாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி