புதுடெல்லி :- பாராளுமன்றத்தில் ஒரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டுமானால் மொத்த உறுப்பினர்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் 54 இடங்களில் வென்றால் தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். சமீபத்தில் நடந்த பாராளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. மொத்தம் உள்ள 543 இடங்களில் அந்த கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன.
எனவே காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதோடு மக்களவையில் முன் வரிசையில் மேலும் 2 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி