செய்திகள்,திரையுலகம் வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்தார் அரவிந்த்சாமி!…

வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்தார் அரவிந்த்சாமி!…

வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்தார் அரவிந்த்சாமி!… post thumbnail image
சென்னை:-மணிரத்னத்தின் தளபதி படத்தில் அறிமுகமான அரவிந்த்சாமி, அவர் இயக்கிய கடல் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதனால் அதுவரை அரவிந்த்சாமியை கண்டுகொள்ளாமல் இருந்த கோலிவுட் இயக்குனர்கள் பலர் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அவருக்கேற்ற கேரக்டர்களை உருவாக்கும் வேலைகளில் இறங்கினார். ஆனபோதும் கடல் படத்திற்கு பிறகு இன்னும் எந்த படத்திலும் அரவிந்த்சாமி கமிட்டாகவில்லை.

இந்நிலையில், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பதாக முன்பு செய்தி வெளியானது. அதையடுத்து, தனி ஒருவன் படத்திலும் அவர் அதிரடியான வில்லனாக நடிப்பதாகவும் அதற்காக அவர் உடல் எடையை குறைத்து வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுவரை பொறுமையாக இருந்து வந்த அரவிந்த்சாமி, இப்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கடல் படத்திற்கு பிறகு தமிழில் பல கதைகள் கேட்டேன். ஆனால் எனக்கு பிடித்தமான வேடங்கள் இல்லாததால் எந்த படத்தையும் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், எனக்கு வில்லனாக நடிக்கும் ஆர்வம் இல்லை. எதிர்காலத்தில் சினிமாவில் நடித்தால் வித்தியாசமான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி