அதனால், கோடம்பாக்கத்தில் இருந்து இடம்பெயர்ந்து கேளாவில் முகாமிட்டுள்ளார் ஜனனி அய்யர். அங்கு இவர் ஏற்கனவே ஆசிப் அலியுடன் நடித்த மோசயிலே குதிரை மீனுக்கள் என்ற படம் வெற்றி பெற்றதால், கவனிக்கப்படும் நடிகையாகி விட்ட ஜனனி அய்யரை, தனது செண்டிமென்ட் நாயகியாக கருதுகிறாராம் ஆசிப் அலி. அதனால் தற்போது தான் நடித்து வரும் டிரைவர் ஆன் டியூட்டி என்ற படத்திலும சிபாரிசு செய்து ஜோடியாக்கியுள்ளார்.
ஆக, இதுவரை ரசிகர்களை கவர்ந்த நடிகையாக முடியவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த ஜனனி அய்யர், இப்போது ஆசிப் அலி போன்ற நடிகர்களை கவர்ந்த நடிகையாகி விட்டதால் இனிமேல் நாம் சினிமாவில் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற சந்தோசத்தில் இருக்கிறார். மேலும், இப்போது மலையாளத்தில் சில இளவட்ட நடிகர், டைரக்டர்கள தனது அபிமானிகளாகி விட்டதால் அவர்களிடமும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளாராம் ஜனனி அய்யர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி