புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பட்ஜெட், பிரேசில் நாட்டில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஜனாதிபதி மாளிகையில் நீண்ட நேரம் செலவிட்ட மோடிக்கு ஜனாதிபதி மதிய விருந்து அளித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜனாதிபதி மாளிகையை ஜனாதிபதி செயலாளர் ஓமித் பால் சுற்றிக் காண்பித்ததோடு மாளிகையின் வரலாற்று பின்னணி பற்றி விளக்கம் அளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி