இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது மரணம் தொடர்பான சர்ச்சை அப்போது முடிவுக்கு வந்தது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சுனந்தா மரணம் தொடர்பாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். சுனந்தா இயற்கையாக இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடுமாறு உயர் அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியும், நிர்ப்பந்தப்படுத்தியும் அறிக்கை பெற்றதாக குப்தா குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் இவ்விஷயத்தில் சுப்ரமணிய சாமியும் தற்போது புது குண்டு போட்டுள்ளார். சுனந்தாவுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான முழு விவரங்கள் தெரியுமென்றும், ராபர்ட் வதேராவுக்கு இதில் உள்ள தொடர்பும் அவருக்கு தெரிந்திருந்ததாகவும் சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விஷயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதற்காகவே சுனந்தா கொல்லப்பட்டதாகவும், அது சசி தரூருக்கும் தெரியும் எனவும் சாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி