இதனைத் தொடர்ந்து புதிய பதிப்பில் தீபிகா இடம் பெற்றுள்ளார். தன்னைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 100 பெண்களின் பெயர்கள் வந்துள்ள புதிய பதிப்பினையும் நேற்று அவர் வெளியிட்டார்.இந்தத் தேர்வு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, தன்னுடைய வெளித்தோற்றம் மட்டுமே இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது, தான் செய்த பணிகளும், தனக்குக் கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களின் சிறப்புமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று கூறினார்.
கடந்த 2, 3 வருடங்களாக நான் செய்துவந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாகும். இதனுடன் இணைந்த புறத் தோற்றமே எனக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கமுடியும் என்று தான் கருதுவதாக தீபிகா குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக காத்ரீனா கைப் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.இவர் சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் ‘கோச்சடையான்‘ படத்தில் நடித்திருந்தார். அடுத்து நடிக்கும் ‘பைண்டிங் பான்னி’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மை தற்போது வெளிவந்துள்ளது. ஹோமி அட்ஜானியா இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், நஸ்ருதீன் ஷா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் இவருடன் நடிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி