அந்த வகையில் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய வில்லன் நடிகர்களையும் அழைத்து போட்டோ செஷன் நடத்தினார். ஆனால், கொலை செய்து விட்டு தலைமறைவாகும் அந்த கேரக்டருக்கு ஏற்ற வில்லன்கள் அவர் எதிர்பார்த்தபடி செட்டாகவில்லை.இந்நிலையில், முதலில் பிரபல வில்லன்களாக தேடிக்கொண்டிருந்தவர்கள், பின்னர் வளர்ந்து வரும் நடிகர்களின் போட்டோக்களை வரவைத்து தேடிக்கொண்டிருந்தபோது, சசிகுமார் நடித்த குட்டிப்புலியில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினாராம். இதனால் இப்போது அவரை கமிட் பண்ணி வில்லனுடன அஜீத் மோதும் காட்சிகளை துரிதமாக படமாக்கி வருகிறார் கெளதம்மேனன்.
இதனால், பல மாதங்களாக வில்லனை தேர்வு செய்தவர்கள், அதிலிருந்து ஒரு 10 வில்லன்களை நிலுவையில் வைத்திருந்தனர். அவர்களெல்லாம் தங்களில் யாராவது ஒருத்தருக்கு அஜீத்துடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இப்போது ராஜசிம்மன் வில்லன் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்கள் அத்தனை பேருமே பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி