செய்திகள் 10ஆம் வகுப்பு மாணவியைக் கற்பழித்த கும்பலின் வெறியாட்டம்…!

10ஆம் வகுப்பு மாணவியைக் கற்பழித்த கும்பலின் வெறியாட்டம்…!

10ஆம் வகுப்பு மாணவியைக் கற்பழித்த கும்பலின் வெறியாட்டம்…! post thumbnail image
கோலார்தங்கவயல் :- கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குப்பூர் கிராமத்தை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்து மதியம் வீட்டிற்கு மாணவி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போது அசன்சஹள்ளி ஏரிப் பகுதியில் நடந்து வந்தபோது மாணவியை, குப்பூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி, அனில்குமார், முனி கிருஷ்ணா, கிருஷ்ணா உள்ளிட்ட 4 பேரும் வழிமறித்துள்ளனர். பின்னர் மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி அருகில் இருந்த தைலமரத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு வைத்து 4 பேரும், மாணவியை கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் மயக்கம் தெளிந்து மாணவி தனது வீட்டிற்கு சென்றாள். ஆனால் நடந்த சம்பவம் பற்றி வெளியே சொன்னால் தனக்கு அவமானம் எனக் கருதி தனது பெற்றோரிடம் மாணவி சொல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து அவளது பெற்றோர், மாணவியை மாலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், மாணவியை பரிசோதித்தனர். அப்போது மாணவியை, மர்மநபர்கள் கற்பழித்தது தெரியவந்தது.

இதுபற்றி டாக்டர்கள், ஆஸ்பத்திரியில் வளாகத்தில் இயங்கி வரும் மாலூர் புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடம் மாஸ்தி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், இதுபற்றி மாலூர் புறக்காவல் நிலைய போலீசார், மாஸ்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மாஸ்தி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சித்தப்பா மற்றும் போலீசார் விரைந்து வந்து, மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் மாஸ்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தறைமறைவான 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி