சென்னை:-விமல், ராஜ்கிரண் தாத்தா பேரனாக நடித்து வெளியாகியுள்ள மஞ்சப்பை இப்போது தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.இதில் ராஜ்கிரண் நடித்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை புக் பண்ணியுள்ளனர்.
அப்படத்தைப் பார்த்து ராஜ்கிரண் வேடம் பிடித்து விட்டதால் தான் அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிப்பதாக தாசரி நாராயணராவ் கூறியுள்ளார். அதேபோல் இந்தியில் அமிதாப்பச்சன் நடிக்கிறாராம்.அமிதாப்பச்சன் சமீபகாலமாக இந்தி சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களையும் வியந்து பேசி வருகிறார். இந்த நிலையில், மஞ்சப்பை படத்தில் தன்னை நடிக்க கேட்டதும் அந்தப்படத்தை பார்த்தவர் கண்டிப்பாக நடிப்பதாக கூறியிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி