பின்னர் அவர் நடிப்பதாக இருந்த நண்பேன்டா, உத்தமவில்லன் படங்கள்கூட இந்த பிரச்னையினால் நழுவிப்போனது. இருப்பினும் இறங்கிவராத அவர் பின்னர் ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தார்.அங்குள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரண்தேஜா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்ததால் இங்கு 3 கோடி என்ற கேட்டவருக்கு அங்கு 4 கோடி வரை சம்பளம் கொடுத்து விட்டனர். அதோடு சமந்தா தற்போது தமிழில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அவருக்காக காத்திருக்கும் சில தெலுங்குப்பட வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்கும் திரைமறைவு வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம் காஜல்.
அதனால் இப்போது யாராவது கோலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை தொடர்பு கொண்டு தமிழில் நடிக்கும் ஐடியா இருக்கிறதா? என்று காஜலிடம் கேட்டால், உங்களுக்கு 4 கோடி சம்பளம் தரும் ஐடியா இருக்கிறதா? என்று பதிலுக்கு கேட்கிறாராம். இதனால் இவர் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பாளர்கள் காஜல்அகர்வாலை சுத்தமாக கைகழுவும் முடிவுக்கு வந்துவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி