இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இரு நாடுகளிலும் சிக்குன்குனியாவை தடுப்பதற்கு போதிய மருந்துகளோ மற்றும் சுகாதார வசதிகளோ இல்லை.இதனால் பரவுதல் அதிகமாக உள்ளது. பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தற்போது விடுமுறை காலமாகும். எனவே ஏராளமானோர் ஹைதி மற்றும் டோமினிக்கன் குடியரசு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தனர். அவர்களை உடனே நாடு திரும்பும்படி ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும் இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹைதியில் இருந்து பிரான்சுக்கு வந்த பயணிகளை டாக்டர்கள் சோதனையிட்டனர். அதில் 17 பேரை சிக்குன்குனியா நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி