இது குறித்து, எய்ம்ஸ் செய்தி தொடர்பாளர் அமித் குப்தா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், சுதிர் குப்தாவின் புகாரை எய்ம்ஸ் நிர்வாகம் முற்றிலுமாக மறுக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி அமைக்கும்படி எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதில், அவருக்கு வெளியில் இருந்து யாராவது நெருக்கடி கொடுத்திருந்தால் நிர்வாகம் அதுபற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நெருக்கடி கொடுத்திருந்தால் அதன் மீதான ஆதாரத்தை அவர் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.
சுதிர் குப்தாவுக்கு வெளியில் இருந்து நெருக்கடி தரப்பட்டது குறித்தோ, அதற்கு அவர் எவ்விதம் நடந்து கொண்டார் என்பதற்கோ எங்களிடம் எந்த சாட்சியமும் இல்லை என்று தெரிவித்தார்.அவரிடம் இப்பிரச்சினையை எழுப்பிய டாக்டர் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்றபோது, எய்ம்ஸ் நிர்வாகம் அதுபோல் கருதினாலோ அல்லது எங்களுக்கு உத்தரவு எதுவும் வந்தாலோ நிர்வாக விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி