செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் குத்துப்பாடல்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியாதா?.. கே. பாலசந்தர் கேள்வி…?

குத்துப்பாடல்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியாதா?.. கே. பாலசந்தர் கேள்வி…?

குத்துப்பாடல்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியாதா?.. கே. பாலசந்தர் கேள்வி…? post thumbnail image
பரத்-நந்திதா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி.’ இந்த படத்தை டைரக்டர் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள்.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது. டிரைலரை தொழில் அதிபர் நல்லி குப்புசாமி வெளியிட, டைரக்டர் சரண் பெற்றுக்கொண்டார். பாடல்களை டைரக்டர் கே.பாலசந்தர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், டைரக்டர் கே.பாலசந்தர் பேசியதாவது:-

‘‘பொதுவாக, குத்துப் பாடல்கள் எனக்கு பிடிக்காது. ஆனால், ஜனங்கள் ரசிக்கிறார்கள். இந்த படத்தில் 3 குத்துப் பாடல்கள் உள்ளன. அதைப்பார்த்தபோது, நானே ஆடலாம் போல் தோன்றியது. தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் இந்தக்கால தலைமுறைக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க வேண்டியிருக்கிறது.

அதனால், சினிமாவில் குத்துப் பாடல்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது. தயாரிப்பாளர்களில் ஆர்.பி.சவுத்ரி, தீவிரமான சினிமா பித்தர். அவர் 86 படங்களை தயாரித்து இருக்கிறார். 86 டைரக்டர்களை அவர் அறிமுகம் செய்து இருக்கிறார்.

இது, தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தி தெரியுமா? தயாரிப்பாளர்கள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். திரையுலகுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறோம்? என்று எல்லா தயாரிப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்.’’

இவ்வாறு டைரக்டர் கே.பாலசந்தர் பேசினார்.

விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், டைரக் டர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் பரத், சிபிராஜ், பிருத்வி, தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, கருணாகரன், நடிகை நந்திதா, டைரக்டர் சரண், பட அதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.எஸ்.சீனிவாசன் ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக பட அதிபர் புஷ்பா கந்தசாமி வரவேற்று பேசினார். டைரக்டர் எல்.ஜி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி