ஆஸ்திரேலியா:-கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.கடந்த வாரம் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டு கூட்டத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லாந்த் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்த போது அடுத்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவில் இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி 2015-16 சீசனில் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பகலிரவு ஆட்டத்தில், “பிங்க்” நிற பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த நாங்கள் தீவிரமாக உள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரிய தலைமை நிர்வாக செயல் அதிகாரி சதர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.கடந்த 2012 ஆம் ஆண்டே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தகக்து.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி