செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தில் ஒரே தோற்றத்தில் இரண்டு விஜய்!…

‘கத்தி’ படத்தில் ஒரே தோற்றத்தில் இரண்டு விஜய்!…

‘கத்தி’ படத்தில் ஒரே தோற்றத்தில் இரண்டு விஜய்!… post thumbnail image
சென்னை:-துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘கத்தி’ படம் படு வேகமாக வளர்ந்து வருகிறது. ரசிர்களிடம் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கத்தி படம் பற்றி பல ஹேஸ்யங்கள் அடிபட்டு வந்தன.

அவற்றில் எது பொய் எது உண்மை என தெரியாதநிலையில், ஒரு பத்திரிகை பேட்டியில் கத்தி படத்தைப் பற்றி வாய் திறந்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். கத்தி’ படத்தில் விஜய் சாருக்கு இரண்டு கேரக்டர்கள், ஒருத்தர் கதிரேசன், இன்னொருத்தர் ஜீவானந்தம். ஆனா, இவங்க இரண்டு பேரும் அப்பா மகன் கிடையாது. என விஜய்யின் கேரக்டர் பற்றி சூசகமாகக் கூறியுள்ளார்.

விஜய் நடிக்கும் கேரக்டர்கள் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லாத விஷயமும் உண்டு. கத்தி படத்தில் விஜய் ஏற்றிருக்கும் இரண்டு வேடங்களுக்கும் தோற்ற வித்தியாச கிடையாது. இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பார்களாம். ஏன் இப்படி? இந்த தோற்ற ஒற்றுமையை பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்வதுபோல் காட்சி அமைத்திருக்கிறாராம் முருகதாஸ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி